செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாழில் இடம்பெற்ற மோதலில் கத்திக் குத்து – மூவர் காயம்

யாழ்ப்பாணம் – மத்திய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள இரு கடை உரிமையாளர்களுக்கு இடையில் இன்று (13) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற மோதலில் 3 பேர் கத்தி குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் நகரில் உள்ள இரு கடை உரிமையாளர்களுக்கிடையில் முரண்பாடுகள் இருந்துள்ளது. இந்த முரண்பாடு இன்று காலை வலுவான நிலையில் இரு தரப்பும் கத்திகள், வாள்களுடன் நகருக்குள் நின்று மோதியுள்ளன. இதன்போது 3 இளைஞா்கள் கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளனர்.

ஒருவருக்கு வயிற்றிலும், ஏனைய இருவருக்கும் கைகள், கால்கள் போன்றவற்றில் காயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

நடிகர் ரஜினிக்கு சீமான் கண்டனம்

Bavan

ஜனாதிபதி ஆ.குழு செயலர் நீதிமன்றில் முன்னிலை

reka sivalingam

உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவிக்கு நிதி அன்பளிப்பு

கதிர்