in , ,

யாழில் இன்று 129 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளமை நேற்று (7) இரவு கிடைத்த பிசிஆர் பரிசோதனை அறிக்கையின்படி இன்று (8) அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 88 பேர் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் பாற்பண்ணை – பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 26 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 20 பேர் யாழ்ப்பாணம் மாநகர சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 3 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புலிகளின் தலைவரது படத்தை வைத்திருந்ததாக இளைஞனுக்கு மறியல்!

யாழ் மாநகர ‘காவல்படை’ சீருடை புலிகளுடையதை ஒத்ததாம் – பொலிஸ் விசாரணை!