in , ,

யாழில் இன்று 26 – போதனாவில் வைத்தியர்கள் உட்பட 19 பேருக்கு உறுதி!

யாழ்ப்பாணத்தில் 26 பேர் அடங்கலாக இன்று (26) வடக்கு மாகாணத்தில் 29 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2 மருத்துவர்கள், தாதியர்கள் மூவர், சுகாதார ஊழியர்கள் நால்வர், மருத்துவ பீட மாணவர்கள் இருவர், தாதிய மாணவர் ஒருவர், சுத்திகரிப்புப் பணியாளர் ஒருவர், மேலும் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 6 பேர் என 19 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகள் இருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

காரைநகரில் சுயதனிமைப்படுத்தப்பட்ட மூவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் பஸ் சாலை தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள்.

திருநெல்வேலி பொதுச் சந்தையைச் சேர்ந்த மேலும் இரண்டு தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாந்தை மேற்கைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்புடைய இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

ரயில் விபத்தில் 32 பேர் பலி!

எம்பியின் வளவுக்குள் சென்று மகனின் மோ.சைக்கிளை தாக்கிய குழு – ஒருவர் கைது!