in ,

யாழில் இன்று 6,000க்கு அதிகமானவர்களுக்கு தடுப்பூசி! – எதிர்பார்த்ததை விடக் குறைவு!!

கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளில் 6 ஆயிரத்து 72 பேர் சைனோஃபோர்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கை தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் இன்று எதிர்பார்க்கப்பட்ட மக்கள் எண்ணிக்கையில் 60 சதவீதமானவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று 10 ஆயிரத்து 52 பேருக்குத் தடுப்பூசி வழங்க எதிர்பார்க்கப்பட்டது. எனினும் 6 ஆயிரத்து 72 பேரே தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட 29 கிராம அலுவலர் பிரிவுகளில் 17 நிலையங்களில் நாளை தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


சினோஃபோர்ம் ஏற்றியோருக்கு அறிவித்தல் – அரசு தீவிர அவதானம் – 5,000 ரூபா வழங்கல் ஆரம்பம் – யாழ். பல்கலை தொடர்பில் வெளியான அறிவிப்பு – இன்னும் பல முக்கிய தகவல்களுடன்….!
👉 https://youtu.be/utpNt59jo9w
🌞 Subscribe us: https://bit.ly/2QOJTcB

அத்தியாவசிய சேவைக்கான அனுமதியை தவறாக பயன்படுத்துபவர்கள் குறித்து விசாரணை

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் கொவிட் உயிரிழப்புக்கள்!