in , ,

யாழில் ஒரே நாளில் 143 கொரோனா! – திருநெல்வலி சந்தை தொடர்பு 127

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று (27) 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதியுடன் தொடர்புடைய மரக்கறி வியாபாரிகள், கடைகளின் வியாபாரிகள் மற்றும் தொழிலாளிகள் என 127 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ பீட மாணவர்கள் மூவர், தாதிய மாணவர் ஒருவர், வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 7 பேர் அடங்கலாக 11 பேருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரில் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்பு உடையவர்கள் என சுய தனிமைப்படுத்தப்பட்ட நால்வருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மஹிந்தவை தோற்கடித்த தவறை மீண்டும் செய்யாதிருங்கள் – கோத்தா!

ஆட்கள் அமர்வதை தடுக்க இயலாததால் ஓயில் ஊற்றினோம் – ஆலய நிர்வாகம்