in , ,

யாழில் ஒரே நாளில் 79 பேருக்கு தொற்று உறுதி!

யாழ்ப்பாணத்தில் இன்று (7) மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி உடுவில் சுகாதார அதிகாரி பிரிவில் 9 பேர், அவர்களில் 5 பேர் யாழ் மாநகர சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள். ஏனைய நான்கு பேரும் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.

நல்லூர் சுகாதார அதிகாரி பிரிவு 06, அவர்கள் நால்வரும் யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலையங்களைச் சேர்ந்தவர்கள்.

சண்டிலிப்பாய் சுகாதார அதிகாரி பிரிவு 02, அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மாநகர கடைத் தொகுதியைச் சேர்ந்தவர்கள்.

சங்கானை சுகாதார அதிகாரி பிரிவு 01, யாழ். போதனா வைத்தியசாலை 04, தெல்லிப்பழை சுகாதார அதிகாரி பிரிவு 02, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை 01 என 25 பேருக்கு தொற்று உறுதியானது.

இன்று மட்டும் யாழ்ப்பாணத்தில் 79 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ் நவீன சந்தை தொகுதியில் 54 பேருக்கு கொரோனா!

சிவஞானசோதிக்கு நாளை மக்கள் அஞ்சலிக்கூட்டம்!!!

பந்துலவின் கணக்கின்படி ஒருவருக்கு 17 கிராம் அரிசியே கிடைக்கும்!