in , ,

யாழில் கண்ணீருடன் மாபெரும் போராட்டம் – பெருமளவானோர் திரண்டனர்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச தினமான இன்று (30) காலை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டப் பேரணியானது யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் ஆரம்பமாகி மருத்துவமனை வீதியின் ஊடாக சென்று மாவட்ட செயலகத்தை அடைந்தது.

இந்தப் போராட்டத்தில் தமது பிள்ளைகளை, சொந்தங்களை இழந்து அவர்களது நிலையைை அறிய முடியாமல் தவித்து வரும் தாய்மார்கள் பலரும் கண்ணீருடன் கதறி அழுது நீதி குரலை வெளிப்படுத்தினர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினாரால் மனித உரிமைகள் ஆணைகுழுவிற்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த மகஜரினை அருந்தந்தையர்கள் சின்னத்துரை லீயோ ஆம்சொங், ம.ரெக்ஸ் மற்றும் அருட்சகோதரி அண்ரனிற்ரா மாற்கு ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

ஆர்ப்பாடத்தில் கலதுகொண்டவர்கள், “கோட்டா அரசே நீ கொண்டு போனவர்கள் எங்கே? உங்கள் இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள்? சர்வதேச விசாரணை வேண்டும். இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே?” என கோசங்களை எழுப்பியவாறும் பேரணியில் கலந்துகொண்டனர்.

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக பொதுமக்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாளை வடக்கு – கிழக்கில் மாபெரும் போராட்டப் பேரணி!

பொலிஸாரின் தடையை உடைத்தெறிந்து மட்டு’வில் உணர்வெழுச்சி போராட்டம்!