in , ,

யாழில் திடீர் பாய்ச்சல்! நேற்றுவரை 45 வர்த்தகர்கள் மீது வழக்கு!

அதிகவிலையில் பொருள்களை விற்போர் மீது திடீர் பாய்ச்சல்
நேற்றுவரை 45 வர்த்தகர்கள் மீது வழக்கு! யாழ்.மாவட்டச் செயலர் தெரிவிப்பு.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் அதிக விலைக்­குப் பொருள்­களை விற்­பனை செய்­தல், காலா­வ­தி­யான பொருள்­களை விற்­ப­னை­செய்­தல் போன்ற குற்­றச்­சாட்­டு­க­ளில் கடந்த மூன்று வாரங்­க­ளில் நடத்­தப்­பட்ட சோத­னை­க­ளின் மூல­மாக இது­வரை 45 பேருக்கு எதி­ராக வழக்­கு­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளன என்று யாழ்ப்­பாண மாவட்­டச்­செ­ய­லர் க.மகே­சன் தெரி­வித்­தார்.
அவர் மேலும் தெரி­விக்­கை­யில்,

நேற்­றைய தின­மும் 8 பேருக்கு எதி­ராக வழக்­கு­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளன. எனி­னும், நீதி­மன்ற நட­வ­டிக்­கை­கள் வரை­ய­றுக்­கப்­பட்­டுள்­ளமை கார­ண­மாக வழக்­கு­கள் விசா­ர­ணைக்கு எடுக்­கப்­ப­டு­வ­தில் தாம­தம் நில­வு­கின்­றது.
தொடர்ச்­சி­யாக பாவ­னை­யா­ளர் அதி­கார சபை­யால் களப் பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அத­னு­டன் இணைந்த வகை­யிலே நிறுத்­தல் மற்­றும் அள­வை­கள் திணைக்­க­ள­மும் இந்­தச் சந்­தர்ப்­பத்­தில் தங்­க­ளு­டைய பணி­யா­ளர்­களை பரி­சோ­தனை நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டுத்­து­கின்­றது.

மேலும் நடை­பாதை வியா­பார நிலை­யங்­க­ளை­யும் நட­மா­டும் வண்­டி­க­ளை­யும் பரி­சோ­தனை செய்­ய­வுள்­ளார்­கள். எனவே வியா­பா­ரி­கள் மிக­வும் விழிப்­பு­ணர்­வு­டன் பொது­மக்­க­ளுக்கு நியாய விலை­யில் பொருள்­களை விற்­பனை செய்­ய­வேண்­டும். பொருள்­களை அதிக விலைக்கு விற்­பனை செய்­கின்­றமை கண்­ட­றி­யப்­பட்­டால் சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். பாவ­னை­யா­ளர் அலு­வல்­கள் அதி­கா­ர­ச­பை­யு­டன் இணைந்த வகை­யில் ஒவ்­வொரு பிர­தேச செய­லர் பிரி­வி­லும் 5 பட்­ட­தாரிப் பயி­லு­நர்­க­ளு­டன் இணைந்து இந்தப் பரி­சோ­தனை நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

குறிப்­பாக சீனி, அரிசி மற்­றும் அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­கள் தொடர்­பான விற்­பனை நிலை தொடர்­பில் ஆரா­யப்­பட்டு வரு­கின்­றது. நேற்­றுத் தொடக்­கம் மிக­வும் இறுக்­க­மான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டுவரு­கின்­றன. – என்­றார்.

கொரோனாத் தொற்றால் யாழ்ப்பாணத்தில் 5பேர் வவுனியாவில் 2பேர் நேற்றுச் சாவு!

தாயின் இறப்­பைத் தாங்­காது­ உயிர்­மாய்த்தார் மகன்!வெள்ளவத்தையில் சம்பவம்!