சீரற்ற காலநிலை காரனமாக யாழ் மாவட்டத்தில் 558 குடும்பத்தை சேர்ந்த 1,745 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அத்தோடு 77 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
காரைநகர் பிரதேசத்தில் ஒரு இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டு 14 குடும்பங்களை சேர்ந்த 41 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.