செய்திகள் தலையங்கம் யாழ்ப்பாணம்

யாழில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை! சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் பட்டப்பகலில் நபர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று பகல் வடமராட்சி வியாபாரிமூலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 40 வயதான ஒருவரே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.பருத்துறை வியாபாரிமுலை பகுதியில் கத்தியால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கொலையாளி கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளானர்.

Related posts

கொரோனா சந்தேகநபர் யாழில் திடீர் மரணம்! – காரணம் என்ன?

G. Pragas

தெய்வப் புலவர் திருவள்ளுவரின் குருபூசை இன்று

Tharani

ஷாபி விவகாரம்; நியாயப்படுத்திய அதிகாரி மீது விசாரணை வேண்டும்

Tharani