ஏனையவை செய்திகள்

பெரும்போக நெற் செய்கையாளர்கள் பாதிப்பு!

யாழ். மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருகின்றது. இதனால், விவசாயிகள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

தற்போது பெரும்போக செய்கைக்கான நெல் விதைப்பு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் யாழ். மாவட்டத்தில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தது. இதனால் பெரும்பாலான வயல் நிலங்கள் அழிவடைந்தன.

இதனால் அறுவடை செய்து உலரவிடப்பட்ட நெல் மழையில் நனைந்து ஈரலிப்பாகக் காணப்படுவதுடன், அறுவடை செய்யப்படாத விளை நிலங்களிலும் நீர் நிரம்பியுள்ளது.

நெல்லை உலர வைப்பதற்கான வசதிகள் இல்லாமையினால் விவசாயிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

Related posts

மதிலில் மோதி லாெறி; ஒருவர் பலி!

கதிர்

பிரதமருக்கு பல விடயங்கள் தெரியவில்லை – விக்னேஸ்வரன் சாடல்

G. Pragas

பிரமாண்டமான முறையில் நல்லூரில் மாவீரர் நினைவாலயம்

G. Pragas