in , ,

யாழில் முதலாவது கொரோனா தொற்று மரணம்!

தீவகம் வேலணையைச் சேர்ந்த 73 வயதுடைய கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்தார் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

“கொழும்பு தனியார் வைத்தியசாலையில் பக்கவாத (ஸ்ரோக்) நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதியவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கடந்த மாதம் மாற்றப்பட்டார்.

அவருக்கு கொரோனா தொற்று கண்டறியபட்ட நிலையில் அநுராதபுரம் சிகிச்சை நிலையத்துக்கு அவர் மாற்றப்பட்டார்.

எனினும் அவரது உடல்நிலை கடுமையானதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று (7) மீளவும் மாற்றப்பட்டார். அவரை கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்தில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டது.

எனினும் அவர் சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது சடலம் கொரோனா சுகாதார கட்டுப்பாடுகளுக்கு அமைய உறவினர்கள் சிலரின் பங்கேற்புடன் தகனம் செய்யப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் பதிவான முதல் கொரோனா தொற்று மரணம் இதுவாகும். இதன்படி வடக்கு மாகாணத்தில் வவுனியாவில் ஒருவரும் மன்னாரில் இருவரும் நால்வர் கொரோனா நோயால் உயிரிழந்துள்ளனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ‘ரூ.1000’ வழங்க சம்பள நிர்ணய சபை அனுமதி!

விமலுடன் வெளிநாட்டு உளவாளிகள் – பெரமுனவினர் திடீர் தாக்குதல்!