in , ,

யாழில் மேலும் மூவர் கொவிட் தொற்றால் மரணம்!

கொரோனா தொற்றினால் இன்று (29) வியாழக்கிழமை மூவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 79 வயதுடைய பெண் ஒருவரும் திருநெல்வேலியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரும் இன்று உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அச்சுவேலியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் இன்று நண்பகல் உயிரிழந்தார்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126ஆக உயர்வடைந்துள்ளது.

சிகிச்சையளிப்பதில் தாமதம்! தோட்ட மக்களை இழிவாகப் பேசிய மருத்துவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

நாட்டில் தீவிரமடையும் கொரோனா! 2,329 தொற்றாளர்கள் இன்று அடையாளம்!