செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாழில் மேலும் 8 பேருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது!

யாழ்ப்பாணம் – நாவந்துறையில் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த 8 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

சுவிஸ் பாஸ்டரின் ஆராதனையில் பங்கேற்ற நாவந்துறையைச் சேர்ந்த 4 குடும்பங்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டுள்ளனர்.

அவர்கள் 8 பேரின் மாதிரிகளே கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனைக்கு இன்று (06) பெறப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதன்படி கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

Related posts

யாழ் நகரில் சூடுபிடித்த காதல் விற்பனை

கதிர்

தளுபத்தையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

G. Pragas

“மனப்பாரம்” நூல் வெளியீட்டு விழா இன்று

Tharani