செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாழில் வாக்கெண்ணும் பணி ஆரம்பம்; 11.30கு முதல் முடிவு வெளியாக வாய்ப்பு!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உள்ள தேர்தல் மத்திய நிலையத்தில் இடம்பெற்று வருகிறது.

இன்று (06) காலை 7 மணிக்கு ஊர்காவற்றுறை மற்றும் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிகளின் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணியும் அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்குப் பின்னர் ஏனைய வாக்குகள் எண்ணும் பணியும் ஆரம்பாகியது.

யாழ்ப்பாணத்தில் 73 சாதாரண வாக்குகள் எண்ணும் நிலையங்களிலும் 16 தபால்மூல வாக்குகள் எண்ணும் நிலையங்களிலும் வாக்குகளை எண்ணும் பணி இடம்பெறுகிறது.

யாழ்ப்பாணத்தில் அதிகாரபூர்வமான முதலாவது முடிவு முற்பகல் 11.30 வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் தெரிவித்துள்ளார்.

Related posts

உலருணவு பாெதிகள் வழங்கப்பட்டன!

G. Pragas

ஒற்றை சில்லில் மோட்டார் சைக்கிள் ஓடியவர் பலி!

G. Pragas

கைகொடுக்கும் நண்பர்கள் அமைப்பின் ஆண்டுவிழா!

Tharani