செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாழில் வாள் வெட்டு; இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் – பாண்டியன்தாழ்வு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று (22) இரவு 7.15 மணியளவில் பாண்டியன்தாழ்வு சந்தனமாத கோயிலுக்கு முன்பாக இடம்பெற்றது.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சசிகரன் (வயது-27) என்ற இளைஞனே தலை மற்றும் கையில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றயவரான முச்சக்கர வண்டிச் சாரதியும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

முச்சக்கர வண்டியில் இருந்த இரண்டு இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

காணாமல் ஆக்கப்பட்டோரது குடுங்களின் தகவலை திரட்டவில்லை!

G. Pragas

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

G. Pragas

மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்

Tharani