செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

யாழில் 120 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் 120 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை லொறி ஒன்றில் கடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கீரிமலையைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரும் விஸ்வமடுவைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இருவரும் கீரிமலைப் பகுதியிலிருந்து சிறிய ரக லொறி ஒன்றில் சுமார் 120 கிலோ கிராம் எடையுடைய 60 கஞ்சா பொதிகளை கடத்திச் சென்றபோது கைது செய்யப்பட்டனர்.

லொறி, கஞ்சா என்பவற்றுடன் சந்தேகநபர்கள் இருவரும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

தமிழ் கட்சிகளின் 8 கோரிக்கைகளை சஜித் நிராகரித்துள்ளார் – தவராஜா

G. Pragas

புதையல் தோண்டிய எண்மர் கைது

G. Pragas

மூன்று முஸ்லிம் குடுபங்களை வெளியேறுமாறு கிரான் செயலகம் அறிவுறுத்தல்

G. Pragas

Leave a Comment