செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

ஆலய கேணியில் இளைஞனின் சடலம் – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் – தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயக் கேணியில் இருந்து 28 வயுதுடைய இளைஞனின சடலம் மீட்கப்பட்டுள்ளது என வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இளைஞனின் சடலம் இன்று (28) காலை மீட்கப்பட்டுள்ளது.

ஆலயத்துக்கு வந்த பக்தர்கள் கேணியில் சடலம் இருப்பதை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, முன்னர் சிறுவன் ஒருவனே சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

நாட்டிற்காக படையினரால் மேற்கொள்ளப்படும் சேவை

Tharani

மழை அதிகரிப்பு தொடரும்-வளிமண்டலவியல் திணைக்களம்

reka sivalingam

விதிமீறும் வத்திக்குச்சி வனிதா

G. Pragas

Leave a Comment