in , ,

யாழில் 8 பேர் உட்பட வடக்கில் இன்று 20 பேருக்கு உறுதி!

யாழ் மாவட்டத்தில் 08 பேருக்கம் மன்னார் மாவட்டத்தில் 12 பேருக்கும் என வட மாகாணத்தைச் சேர்ந்த 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மெலிஞ்சிமுனையில் 6 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் இறுதிச் சடங்கு ஒன்றில் பங்குபற்றியவர்கள்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட நவாலியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் நவாலியில் கடந்த வாரம் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஆசிரியையுடன் பேருந்தில் முல்லைத்தீவுக்கு சென்று திரும்பியவர்.

மன்னார் நகரில் உள்ள கொமர்ஷல் கிரடிட் நிதி நிறுவனத்தில் 5 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரி சபையில் பணியாற்றும் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தொற்று அறிகுறிகளுடன் மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்கள்.

மன்னார் மாந்தை மேற்கு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் நகரில் சலூன் தொற்றாளர்களுடன் தொடர்புடைய ஒருவருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தென்னை உற்பத்தி பயன்களை அதிகரிக்க இளைஞர்களே முன்வாருங்கள் – அருந்திக

ஹார்கில்ஸ் திரையரங்கு சென்றோரை அறிகுறி இருந்தால் தொடர்பு கொள்ளுமாறு அறிவிப்பு!