செய்திகள் யாழ்ப்பாணம்

யாழுக்கான விமான சேவையால் எயார் இந்தியா பெருமிதம்

சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பித்து வைக்கப்படுவது, ஒரு பெருமைமிக்க தருணம் என எயார் இந்தியா நிறுவத்தின் தலைவரும் எயார் இந்தியா குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான அஷ்வானி லொஹானி தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று (17) காலை யாழ்ப்பாணத்துக்கான அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் விமான சேவையை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும்,

அலையன்ஸ் எயார் நிறுவனம் சேவையில் ஈடுபடும் 55 ஆவது நகரமாகவும் முதலாவது அனைத்துலக சேவையாகவும் யாழ்ப்பாணத்துக்கான சேவை அமையவுள்ளது. இந்த சேவை ஆரம்பிக்கப்படுவது பெருமைமிக்க ஒரு தருணமாகும் – என்றார்.

Related posts

அரசு பள்ளியை வண்ணமயமாக்கிய ரஜினி ரசிகர்கள்!

Bavan

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

G. Pragas

நாளை 1 மணிக்கு மஹிந்த பதவியேற்பு!

G. Pragas