in ,

யாழ்ப்பாணத்தில் இளம் கர்ப்பிணித் தாய் கொரோனா தொற்றால் சாவு!

கொரோனாத் தொற்றுக்குள்ளான கர்ப்பிணிப் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை் பயனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், நாவாந்துறையைச் சேர்ந்த 36 வயதுப் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த முதலாம் திகதி முதல் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மருத்துவமனையின் தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.

நேற்று இரவு அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

வல்வெட்டித்துறை இளைஞர் கொலை! – சந்தேகநபர்களில் ஒருவர் சிக்கினார்!!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!