செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் சுமூகமாக தேர்தல் இடம்பெறும் – அரச அதிபர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுமூகமான முறையில் தேர்தலை நடத்த முடியுமென்றும் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இந்த வருடம் யாழ் மாவட்டத்தில் 4 லட்சத்து 75 ஆயிரத்து 171 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள். 531 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

வழமை போன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலேயே வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும், வாக்கெண்ணும் நிலையம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சீரற்ற காலநிலை நிலவுவதனால், நெடுந்தீவில் இருந்து உலங்குவானூர்தி மூலம் வாக்குப் பெட்டிகள் மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டு, அங்கே வாக்கெண்ணும் பணிகள் நடைபெறும் – என்றார்.

Related posts

வரலாற்றில் இன்று: டிசம்பர் 14

Tharani

“கூடி மகிழ்வோம்” கலாசார நிகழ்வு

Tharani

இராணுவ பிரசன்னம் வீதிகளில் அதிகரிப்பு

Bavan