in

யாழ்ப்பாணத்தில் மீள அதிகரிக்கிறது கொரோனா!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனாத் தொற்று நிலைமை அதிகரித்துச் செல்கிறது. எனவே, பயணங்கள் மற்றும் இதர செயற்பாடுகளின்போது ஒன்றுகூடுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள் – என்று, யாழ்ப்பாண மாவட்டச்செயலர் க.மகேசன் அபாய அறிவிப்பு விடுத்தார்.

மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு அறிவிப்பு விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது தற்போது கொரோனா அதிகரித்து செல்கிறது. எனவே, பொதுமக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்கவேண்டும். தனியாள் இடைவெளியைப் பேணுங்கள். முகக்கவசம் அணிவதைக் கட்டாயம் பின்பற்றப்படவேண்டும்.

மாவட்டத்தில் கொரோனாத்தொற்றால் இதுவரை 469 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய சுழலில் 634 குடும்பங்கள் கொரோனாத் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போதைய சுழலில் தளர்வு நிலை அறிவிக்கப்பட்டுள்ளபோதும், சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதனைக் கட்டாயம் பின்பற்றவேண்டும். அவ்வாறு செய்வதன்மூலமே யாழ்ப்பாணத்தில் கொரோனாவை முற்றுமுழுதாகக் கட்டுப்படுத்தலாம்.

கொரோனாத் தடுப்பு நடவடிக்கையில், ஒவ்வொருவரும் எந்தளவுக்கு கட்டுப்பாட்டுடன் இருக்கின்றோமோ அந்தளவுக்கு நாமும் எமது சமுதாயமும் பாதுகாப்பாக இருக்கமுடியும். – என்று தெரிவித்தார்.

முதியோர் இல்லம் திறந்து வைப்பு!

திருமணத்துக்குச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி இளைஞர் சாவு!