in ,

யாழ்ப்பாணத்தில் 95 பேர்! வடக்கில் 137 பேர்! ஒருவர் உயிரழப்பு! – கொரோனா தாண்டவம்!!

யாழ்ப்பாணத்தில் 95 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 137 பேருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 95 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 31 பேரும், வவுனியா மாவட்டத்தில் 7 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 பேரும் கொரோனாத் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 8 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் குருநகரைச் சேர்ந்த 66 வயதுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மூவருக்கும், கோப்பாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும், தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரவெட்டி மருத்துவ அதிகாரி பிரிவில் 36 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லியடி வெதுப்பகம் ஒன்றில் 33 பேருக்கும், நெல்லியடி வர்த்தகர்கள் மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை அந்தோனிபுரம் கிராமத்தில் சுயதனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட 17 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 15 பேருக்கும், சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும், ஒட்டுசுட்டான் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 31 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர். சிலர் வீதி திருத்தப் பணிகளில் ஈடுபடுவர்கள். ஏனையோர் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்.

வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 4 பேருக்கும், வவுனியா மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


BIG STORY: இலங்கையில் 10 லட்சம் தொற்றாளர் | சைபர் தாக்குதலில் சிக்கியது நாடு | முள்ளிவாய்க்கால் உணர்வுபூர்வம் | அரசுக்கு விழுந்த அடி | UTHAYAN TV | 18.05.2021
🛑 https://youtu.be/7Y7RioUuAE4
❤️ Subscribe us: https://bit.ly/2QOJTcB

காலச்சுவடுகள்- சர்வதேசம்

கொவிட் தொற்று; யாழில் பெண்ணொருவர் மரணம்!