உலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்தி

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி கின்னஸ் சாதனை!

யாழ்ப்பாணம் அனலைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சங்கவி ரதன் எனும் பதினொரு வயதுச் சிறுமி, இடுப்பில் வளையம் ஒன்றைச் சுற்றியவாறு றூபிக்கின் கனசதுரத்தின் (றூபிக்ஸ் கியூப்) தனித்தனி நிறங்களை ஒரு கையினால் ஒழுங்குபடுத்தி கின்னஸ் உலகசாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

இந்தச் சிறுமி கடந்த ஆகஸ்ட் 1ஆம் திகதி கனடாவின் மிஸிஸாகா நகரில் கின்னஸ் சாதனை நிறுவன பிரதிநிதிகள் முன்னிலையில், 55 நிமிடங்களில் 30 தடவைகள் 3×3 றூபிக்கின் கனசதுரத்தை ஒழுங்கு படுத்தி, 25 தடவைகள் என்றிருந்த முன்னைய சாதனையை முறியடித்து புதிய உலகசாதனை படைத்துள்ளார்.

கொரோனா காலத்தில் வீட்டில் இருந்த நேரத்தை முறையாகப் பயன்படுத்தி இவர் இந்த சாதனையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், பிறப்பின் போது ஏற்பட்ட காயம் ஒன்றினால் வலக்கரம் இயங்க முடியாத நிலையிலும், தனது இடக்கரத்தின் உதவியுடன் இந்த சாதனையை மேற்கொண்டு இவர் பலருக்கும் முன்னுதாரணமாக ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல் வன்முறை – 44 பேர் கைது!

G. Pragas

உணவு விடுதியில் தாக்குதல்; பணியாளர் படுகாயம்

reka sivalingam

ரயில் சேவைக்காக விசேட செயலணி -சி.பி ரத்நாயக்க

reka sivalingam