செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாழ் மாவட்டத்தை 5 வலயங்களாக பிரியுங்கள்: சைவமகா சபை ஆலோசனை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தை ஐந்து வலயங்களாக பிரித்து ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்று அகில இலங்கை சைவ மகா சபை ஆலோசனை முன்வைத்துள்ளது.

நேற்று முன்தினம் (24) ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போது மக்கள் நடந்து கொண்ட விதத்தை பாடமாக எடுத்துக் கொண்டு குறித்த ஆலோசனையை செயற்படுத்துமாறு சைவ மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சைவ மகா சபை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

யாழ். மாவட்டத்தை வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவகம் மற்றும் யாழ் மாநகரம் என ஐந்து வலயங்களாக பிரித்து ஐந்து வலயங்களுக்கும் தனித்தனியான ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.

இக்காலப்பகுதியில் ஒரு பிரதேசத்தில் இருந்து இன்னொரு பிரதேசத்திற்கு அத்தியாவசிய பணியாளர்களும் மருத்துவர்களும் செல்வதற்கு என போக்குவரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியை வழங்க வேண்டும்.

யாழ். மாநகரத்திற்கு வீட்டுக்கு வீடு பொருட்களை விநியோகிக்கும் நடைமுறையை கொண்டுவரலாம். ஊரடங்கு ஒரு வாரத்திற்கு தொடரப்பட வேண்டும்.

ஊரடங்கு வேளையில் உரிய அனுமதிகளுடன் நகர்புற களஞ்சியங்களிலிருந்து கிராமங்கள் மற்றும் பிரதேச ரீதியான கடைகளுக்கு பொருட்கள் நகர்த்தப்பட்டு மிகக் குறைந்த எண்ணிக்கையானோருடன் பொருட்கள் விநியோகிக்கப்பட வேண்டும்.

இவ்வாறான நடைமுறையை பின்பற்றினால் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து விரைவான முழுமையான பாதுகாப்பு பெற முடியும். இதைச் செயற்படுத்துமாறு அரச தரப்பையும் அதிகாரிகளையும் வலியுறுத்துகின்றோம் – என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வரலாற்றில் இன்று- (31.01.2020)

Tharani

எனது விடுதலை தன்னிச்சையானது இல்லை! வாழ்வு தாருங்கள்

G. Pragas

மண் சரிவு! போக்குவரத்து பாதிப்பு!

Tharani