செய்திகள்பிந்திய செய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே மற்றுமொரு ரயில் சேவை

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் தற்போது இடம்பெற்றுவரும் ரயில் சேவைக்கு மேலதிகமாக ஒரு சேவை இணைக்கப்படவுள்ளது என்று புகையிரத திணைக்கள வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்த ரயில் சேவை 5ம் திகதிக்கு பின்னர் இடம்பெறவுள்ளதாகவும் திணைக்களத் தவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கொழும்பிலிருந்து மாலை 3.50 மணிக்கு வவுனியா நோக்கி புறப்படும் ரயில் சேவையே யாழ்ப்பாணம் வரை விஸ்தரிக்கப்படவுள்ளது.

அதுபோல் காலை 5.45 மணிக்கு வவுனியாவில் இருந்து கொழும்புக்கு ரயில் சேவை இடம்பெறுகின்றது. இந்த சேவையை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரை கொண்டு செல்ல திட்டமிடப்படுகின்றது.

இந்நிலையில் மேற்படி இரு சேவைகளும் மக்களுக்கு பயன்படும் வகையில் நேரமாற்றங்கள் மேற்கொள்ளும் வேலைகள் முடிவடைந்ததும் புதிய சேவை ஆரம்பிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

4003 மற்றும் 4004 ரயில்களே புதிய ரயில் சேவையில் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்பிரகாரம் தினமும் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் எதிர்வரும் 5ம் திகதிக்கு பின் ரயில் சேவை ஏழாக அதிகரிக்கப்பவிருக்கின்றது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282