யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35வது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று (24) காலை ஆரம்பமாகியது.
நாளை வரை ஆறு அமர்வுகளாக பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்தப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வில், யாழ். பல்கலைக்கழக வேந்தர், பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமை தாங்கி பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
மேலும், பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.ஸ்ரீசற்குணராஜா, வவுனியா வளாக முதல்வர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன், பதிவாளர் வி.காண்டீபன், நிதியாளர் எஸ்.சுரேஷ்குமார், நூலகர் சி.கல்பனா மற்றும் பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உட்பட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.