செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண பாடசாலைகளில் கிருமி தொற்று நீக்கல்

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் நிலையில் பாடசாலை வளாகத்தில் கிருமி தொற்று நீக்கல் பணிகள் யாழ்ப்பாணத்தில் இன்று (24) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சனின் ஒருங்கிணைப்பில் சிறப்பு அதிரடிப் படையினரால் இந்த பணி யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர்மடம் கல்லூரியில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.

3 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் எதிர்வரும் 29ம் திகதி தொடக்கம் 5 கட்டங்களாக மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்நிலையிலேயே பாடசாலைகளுக்கு கிருமித் தொற்று நீக்கி விசுறும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவுக்கு உள்பட்ட பாடசாலைகளுக்கு இன்று தொடக்கம் வரும் சனிக்கிழமை வரை பிரதேச செயலர் எஸ்.சுதர்சனின் ஒருங்கிணைப்பில் சிறப்பு அதிரடிப் படையினரால் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

லோயாலா கல்லூரி நீச்சலில் சம்பியன்

Tharani

தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் மீது குற்றச்சாட்டு

Tharani

காெராேனாவால் முடங்கிய அவுஸ்திரேலியா

Tharani