in

யாழ் ஆய்வுகூடத்தில் இன்று 9 பேருக்கு உறுதி!

வடக்கு மாகாணத்தில் இன்று (14) 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 60 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையின் போது மன்னாரில் கடந்த சில நாட்களில் அடையாளம் காணப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்புடைய 5 பேருக்கு தொற்று உறுதியாறது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவைச் சேர்ந்த 2 பெண்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் பணியாற்றும் கடையைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்டது.

அதனால் குறித்த பெண்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மாதிரிகள் பெறப்பட்டு இன்று பரிசோதனைக்கு உள்படுத்திய போது தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய் ஒருவருக்கும் தொற்று உறுதியானது.

கச்சதீவு திருவிழா நடைபெறாது!

நல்லூர் கந்தன் அலங்கார வளைவு திறப்பு!