வட மாகாணத்தில் இன்று (23) ஒரே நாளில் 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ஆய்வு கூடங்களில் இன்று 658 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இவ்வாறு 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் 25 பேருக்கும், யாழ் மாவட்டத்தில் 17 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் முன்னதாக பருத்தித்துறையில் 13 பேருக்கும், பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர்கள் இருவர் உட்பட்ட மூவருக்கும், பிறிதொரு நபருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.