யாழ். ஆய்கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இன்று (13) நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடம் மற்றம் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடம் என்பவற்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட 615 பேரின் பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இவ்வாறு நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவை சேர்ந்த இருவருக்கும் மன்னாரைச் சேர்ந்த இருவருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக வவுனியாவில் இன்று காலை 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.