செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாழ் ஐக்கிய வியாபாரச் சங்கத்தின் 100வது ஆண்டு விழா!

யாழ்ப்பாண ஐக்கிய வியாபாரச் சங்கத்தின் 100வது ஆண்டு நிறைவு விழாவும், மலர் வெளியீடும் இன்றையதினம் (26) இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில், யாழ்ப்பாண ஐக்கிய வியாபாரச் சங்கத்தின் தலைவர், வைத்திய கலாநிதி எஸ்.நிமலன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

விழாவின் ஆரம்பத்தில் மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்பு நடனம், தலைமையுரை, ஆசியுரை என்பன முறையே இடம்பெற்றது.

நூற்றாண்டு மலரினை சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் வெளியிட்டு வைத்திருந்தார்.

குறித்த விழாவில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகம், யாழ் மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன், ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், யாழ் போதனா வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நச்சினார்க்கினியர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்து.

Related posts

வெள்ளத்தில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு!

G. Pragas

மண்முனைப்பற்று பிரதேச செயலக மகளிர் தினம்

reka sivalingam

கிரிக்கெட் எய்ட்க்கு தற்காலிகத் தடை

admin

Leave a Comment