செய்திகள்தலைப்புச் செய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்

யாழ். கோட்டையில் சமூகப்பிறழ்வு: திடீர் சுற்றிவளைப்புக்கு திட்டம் – மாந­கர முதல்­வர் மணி­வண்­ணன்

யாழ்ப்­பா­ணம் கோட்­டைப் பகு­தி­யில் திடீர் சுற்­றி­வ­ளைப்­பு­கள் இனி­மேல் மேற்­கொள்­ளப்­ப­டும். இதன்­போது சமூ­கச் சீர­ழிவு, போதைப்­பொ­ருள் பாவ­னை­யா­ளர்­கள் கண்­ட­றி­யப்­பட்­டால் அவர்­கள் மீது கடு­மை­யான சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என யாழ். மாந­கர சபை­யின் முதல்வர் விஸ்­வ­லிங்­கம் மணி­வண்­ணன் எச்­ச­ரித்­துள்­ளார்.

யாழ். கோட்டை சூழ­லிலே அதி­க­ள­வான சமூக சீர­ழிவுச் செயற்­பா­டு­கள் மற்­றும் போதைப்­பா­வனை என்­பன இடம்­பெ­று­கின்­றன என பல்­வேறு தரப்­பி­ன­ரா­லும் சுட்­டிக்­காட்­டப்­பட்­ட­தை­ய­டுத்து மாந­க­ர­சபை மேயர் விஸ்­வ­லிங்­கம் மணி­வண்­ணன் தொல்­லி­யல் திணைக்­க­ளத்­தி­ன­ரு­டன் நேற்­றுக் காலை யாழ். கோட்­டைப் பகு­திக்கு நேர­டி­யா­கச் சென்று பார்­வை­யிட்­டார்.

அதன் பின் கருத்­துத் தெரி­விக்­கும்­போதே மேற்­கண்­ட­வாறு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

எமது கண்­க­ளுக்கு முன்­பாக சமூ­கச் சீர­ழிவு இடம்­பெ­று­வதை அவ­தா­னித்­துக்­கொண்­டி­ருத்­தல் தவறு. உட­ன­டி­யாக யாழ். கோட்­டை­யைச் சுற்­றி­யுள்ள பற்­றைக் காடு­களை துப்­பு­ரவு செய்­வ­தற்கு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. தொல்­லி­யல் திணைக்­க­ளத்­தி­ன­ரோ­டும் கலந்­து­ரை­யாடி அவர்­க­ளது ஒத்­து­ழைப்­பு­டன் இந்­தச் செயற்­பாடு இடம்­பெ­ற­வுள்­ளது.

யாழ்ப்­பா­ணக் கோட்டை யாழ்ப்­பா­ணத்­தி­னு­டைய வர­லாற்­று­டன் தொடர்­பு­பட்­டது. இந்­தப் பிராந்­தி­யத்தை தூய்­மை­யா­க­வும் சுற்­றுலா பய­ணி­க­ளுக்கு ஏற்­ற­வாறு மாற்ற வேண்­டிய கடமை எமக்­கு­ரி­யது. இதனை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு தமிழ் மக்­கள் நன்­கொ­டை­ய­ளிக்க முன்­வ­ர­வேண்­டும்.

இங்கு இடம்­பெ­று­கின்ற போதைப்­பொ­ருள் வர்த்­த­கம், சமூ­கச் சீர­ழி­வு­கள் ஆகி­ய­வற்றை தடுக்க தொடர்ச்­சி­யாக திடீர் சுற்­றி­வ­ளைப்பு கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன – என்­றார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266