செய்திகள் யாழ்ப்பாணம்

யாழ் நகரை சுத்தமாக்கும் பணி முன்னெடுப்பு!

யாழ்ப்பாணம் நகரப்பகுதியை சுத்தமாக்கும் பணி இன்று (26) யாழ் மாநகர சபையின் சுகாதார ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவகற்றும் செயற்பாடு மந்த கதியில் இடம்பெற்று வந்த நிலையில் இன்று காலையிலிருந்து யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்ட யாழ்ப்பாண நகர் பகுதி யாழ் மாநகரசபையின் சுகாதார ஊழியர்களால் சுத்தம் செய்யப்பட்டதோடு, கழிவகற்றும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் ஜெயசீலன் குறித்த பணிகளை மேற்பார்வை செய்ததோடு குப்பைகள் தேங்கியுள்ள இடங்களில் குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது.

Related posts

சட்டவிரோத மண் அகழ்வு: கிண்ணியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

Tharani

அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ எட்டுப் பேர் உயிரிழப்பு

கதிர்

சிறிரஞ்சனின் நூல்கள் வெளியீடு

Tharani

Leave a Comment