செய்திகள் யாழ்ப்பாணம்

நாகர்கோவில் பகுதியில் இராணுவம் மிருகத்தனமாக தாக்குதல்

யாழ்.நாகா்கோவில் கிழக்கு பகுதியில் இராணுவத்தினா் இளைஞன் ஒருவனை கைது செய்ய முயற்சித்தபோது அவா் தப்பி சென்ற நிலையில் பொதுமக்கள் மீது குறிப்பாக பெண்கள், சிறுவா்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனா்.

இந்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. கடந்த தை பொங்கல் தினத்தன்று இதே பகுதியில் இராணுவத்தினருக்கும் இளைஞா்களுக்கும் இடையில் தா்க்கம் உருவானது.

இதனையடுத்து இளைஞா்கள் பலா் கைது செய்யப்பட்டதுடன் பிரதான சந்தேகநபா் என ஒரு இளைஞனை இராணுவம் தேடிவந்தது. ஆனாலும் நீதிமன்றில் அவ்வாறு எவரையும் தேடவில்லை என பொலிஸாா் கூறியிருந்தனா்.

இவ்வாறான நிலையில் ப.ஐங்கரன் என்ற இளைஞனை நாகா்கோவில் கிழக்கு கடற்கரையில் வைத்து கைது செய்ய இராணுவ புலனாய்வுப்பிாிவு முயற்சித்தபோது அவா் கடலில் குதித்து நீந்தி தப்பியுள்ளாா்.

இதனையடுத்து கரையில் நின்றவா்கள் மீதும், தப்பி சென்ற இளைஞனின் சகோதரிகள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கின்றது. தாக்குதலுக்குள்ளான இரு பெண்களில் ஒரு பெண் கா்ப்பவதி என கூறப்படுகிறது.

மேலும் சிறுவன் ஒருவன் மீதம் தாக்குதல் நடாத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனை ஐங்கரன் என்ற இளைஞனின் மனைவி உறுதிப்படுத்தியுள்ளதுடன், இராணுவ சீருடை மற்றும் சிவில் உடையில் ஆயுதங்களுடன் வந்தவா்கள் தாக்கியதாக கூறினாா்.

Related posts

தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட அறிவிப்பு…!

Tharani

நாயால் வந்த வினை; முல்லை இளைஞன் அடித்து கொலை!

G. Pragas

கடற்படையின் சுற்றாடல் பாதுகாப்பு திட்டத்திற்கு சீனா ஒத்துழைப்பு

Tharani