செய்திகள்தடயத்தை தேடி!யாழ்ப்பாணம்வரலாற்றுப் பதிவுகள்

யாழ் நூலக எரிப்பு- ஒரு கறை படிந்த – துயரமான சம்பவமாகும்.

யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டமை தமிழ் மக்கள் மத்தியில் அழியாக் காயம் ஒன்றை ஏற்படுத்திய சம்பவமாகும்.

இந்த துர்ப்பாக்கிய கரிநாள் நிகழ்ந்து இன்றுடன் 40 வருடங்களாகியுள்ளது.

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் வராலாற்றுச் சுவடுகளை இழக்க செய்ய வேண்டும் என்ற சதித் திட்டத்தின் கீழ் 1800 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட ஓலைசுவடிகள், வரலாற்று சான்றுகள் உள்ளிட்ட 97,000 க்கும் மேற்பட்ட விலை மதிக்க முடியாத நூல்களை கொண்ட தெற்காசியாவில் சிறந்த நூலகமாக விளங்கிய யாழ் பொது நூலகம் மே 31 நள்ளிரவில் பெரும்பான்மையின பொலிஸாரினால் எரிக்கப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் அழிந்தன.

அக்காலத்தில் இருந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் இருவர், அதிகாரிகள் மற்றும் பெரும் பொலிஸ் படையுடன் யாழ். மாவட்ட சபைத் தேர்தலைக் கவனிப்பதற்காக வருகை தந்திருந்த நிலையிலேயே யாழ் நூலகமும், யாழ் நகரமும் எரித்து சாம்பராக்கப்பட்டது.

எனினும் கடந்த 2003 ஆம் ஆண்டு இந்த நூலகம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266