செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 50 பேருக்கு மாதாந்தம் 5 ஆயிரம்!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பயிலும் வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது.

எம். எம் பவுண்டேசன் (Mosvold-Martinus Foundation) நிதியத்தால் ஏ.கே.ஓ புலமைப் பரிசில் (AKO Scholarship Fund ) திட்டத்தின் கீழ் மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது.

இதன்படி, பல்கலைக்கழகத்துக்கும், எம். எம் பவுண்டேசன் நிதியத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கடந்த திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டது.

இந்த உடன் படிக்கையில் யாழ். பல்கலைக்கழகத்தின் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, பதிவாளர் வி. காண்டீபன் ஆகியோரும், எம். எம் பவுண்டேசன் நிதியத்தின் சார்பில் அதன் முகாமைத்துவ அறங்காவலர் டி. நிமல் மரின்டஸ் மற்றும் அறங்காவலர் நிலங்கா மரின்டஸ் ஆகியோரும் ஒப்பமிட்டடனர்.

இந்த நிகழ்வின் போது யாழ். பல்கலைக்கழக மாணவர் நலச் சேவைகள் உதவிப் பதிவாளர் எஸ். ஐங்கரன், நிதியாளர் கே. சுரேஸ்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994