in ,

யாழ். பல்கலைக்கழக “மார்ஷலுக்கு” கொவிட்-19 தொற்று!! – முழுவிவரம் உள்ளே!!

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர் ஒழுக்காற்று அதிகாரி (மார்ஷல்) ஒருவருக்குக் கொவிட் – 19 வைரஸ் தொற்றுள்ளமை இன்று (09.03) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவருடன் தொடர்புடைய ஒருவருக்குக் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் பல்கலைக் கழக மாணவர் ஒழுக்காற்று அதிகாரிக்கு தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டது. இவர் கடந்த மாத இறுதியில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொண்டிருந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்களை இனங்காணும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேவேளை, காரைநகர் டிப்போவில் பணியாற்றும் நடத்துநர் ஒருவரின் உறவினர்கள் 3 பேருக்குக் கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காரைநகர் டிப்போவில் பணியாற்றும் 8 பேருக்கு நேற்று கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதையடுத்து அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்தில் தற்போது பரவலாக கொவிட் – 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர். அதனால் சுகாதாரத் துறையினர் பெரும் இக்கட்டு நிலைமையை எதிர்கொண்டுள்ளனர்.

சமூகத்தில் இருந்து தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படுவது நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில், யாழ்ப்பாணம் குடாநாடு ஆபத்தான நிலைமையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது என்று சுகாதாரத் துறை சார் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விஹாரைக்குள் சிறுவன் துஷ்பிரயோகம்; குற்றவாளிக்கு 36 ஆண்டுகள் சிறை!

ரூ.1000 சம்பள உயர்வு வழங்கும் வர்த்தமானி வெளியானது!