செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

யாழ் பல்கலையில் மொழி பெயர்ப்புத்துறை கண்காட்சி

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மொழி பெயர்ப்புத்துறை மாணவர்களால் சர்வதேச மொழி பெயர்ப்புத் தினத்தை எடுத்துக்காட்டும் முகமாக விழிப்புணர்வு கண்காட்சி ஒன்று நேற்று (02) நடாத்தப்பட்டது.

சர்வதேச மொழி பெயர்வு தினத்தை உலகிற்கு எடுத்துகாட்டும் முகமாக மொழி பெயர்ப்பு சம்மந்தமாகவும் இலங்கையில் மொழி பெயர்ப்பு எவ்வாறு உள்ளது என்பது தொடர்பாகவும் தெளிவூட்டும் இக்கண்காட்சி பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளள கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.

மொழி பெயர்ப்புத்துறை கற்கைநெறியின் இணைப்பாளர் க.கண்ணதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தகுதிவாய்ந்த அதிகாரி கே.கந்தசாமியும், சிறப்பு விருந்தினராக யாழ் கலைப்பீட பீடாதிபதி கே.சுதாகரும் கலந்து கொண்டனர். (PS)

Related posts

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி!

G. Pragas

கொரோனா வைரஸ் தாக்கம்: சுகாதார அமைச்சு விடுக்கும் மகிழ்ச்சி அறிவிப்பு

Tharani

மகிந்தவிற்கு கடிதம் எழுதிய லண்டன் சிறுவன்

reka sivalingam