செய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்

யாழ்.பல்கலை மாணவர்களால் தியாக தீபத்துக்கு ஊர்திப் பவனி

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு ‘அஹிம்சை நாயகனின் கொள்கையில்’ எனும் தொனிப்பொருளில் யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து நேற்று ஊர்தி பவனி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தமிழ்த் தேசத்தின் அங்கீகாரம், இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நீதி, அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத்த தடைச் சட்டத்தை நீக்கு, பௌத்த சிங்களமயமாக்கலை நிறுத்து முதலிய விடயங்களை வலியுறுத்தி ஊர்தி பவனி முன்னெடுக்கப்பட்டது.
ஊர்திபவனி யாழ். பல்கலை முன்றிலிலிருந்து புறப்பட்டு பரமேஸ்வரா சந்தியை அடைந்து பலாலி வீதியூனூடாக திலீபனுடைய இல்லத்தை அடைந்தது.

பின்னர் மருதனார்மடச் சந்தியை அடைந்து கே.கே.எஸ். வீதியினூடாக யாழ்.நகர் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபத்தின் பிரதான நினைவுத்தூபிக்கு வந்தடைந்தது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266