in , ,

யாழ் பஸ் சேவைகள் வழமையான இடத்திலேயே ஆரம்பம் – அடங்கமறுக்கும் இபோசவினர்!

யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையத்தில் இருந்து இன்றும் வழமைபோல் சகல பஸ் சேவைகளும் இடம்பெற்றதுடன், வர்த்தக நிலையங்கள் சிலவும் திறக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், தற்போது பொலிஸார், இராணுவத்தினர், சுகாதார அதிகாரிகள் வர்த்த நிலையங்களை மூடுமாறும், பஸ் சேவைகளை இடமாற்றுமாறும் அறிவுறுத்தி வருகின்றனர்.

அத்துடன் கடைத் தொகுதிகளுக்கு கிருமி நாசினிகள் விசிறப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் புதிய பஸ் நிலையத்திற்கு செல்ல மறுப்பதுடன், அதற்கு பதிலாக 10 நாட்களுக்கு சேவையை நிறுத்துவோம் என்று முரண்பட்டுவருவதாக தெரியவருகிறது.

முறையற்ற கொள்கையும், சடல விவகாரமுமே தீர்மானம் நிறைவேற்ற காரணம் – சம்பிக்க

தீவிரவாத பிரச்சாரம் – இருவர் கைது!