செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாழ் போதனா வைத்தியசாலைக்கு கிடைத்தது அதிநவீன இயந்திரம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புதிய அதிநவீன (MRI – Magnetic Resonance Imaging) ஸ்கானிங் இயந்திரம் (Scan machine) வழங்கப்பட்டுள்ளது.

வடமாகாண அரச வைத்தியசாலைகளில் நீண்ட காலமாக இந்த இயந்திரம் இன்மையால் கொழும்பு, அநுராதபுரம் வைத்தியசாலைக்கு சென்றே சிரமத்தின் மத்தியில் MRI ஸ்கான் படங்களை நோயார்கள் எடுத்துக்கொண்டனர். அத்துடன் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்று அதிக பணத்தை செலவிட்டனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு புதிய முதல்தர (Siemens) சிமென்ஸ் கம்பனியின் MRI இயந்திரம் கிடைத்துள்ளது. இது நவீன (3T – Siemens Magnetom Verio) என்னும் பலம்வாய்ந்த MRI இயந்திரமாகும்.

இதன்படி கொண்டுவரப்பட்ட இயந்திரம் பொருத்தப்பட்டு இயக்குவது குறித்தான பரீட்சார்த்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின அமைச்சரவைக்கு முன்வைத்ததன் படி இதற்கென 1.65 மில்லியன் அமெரிக்க டொலரில் டிமோ தனியார் நிறுவனத்தில் கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய நிலையில் தற்போது இந்த MRI இயந்திரம் வைத்தியசாலைக்கு கிடைத்துள்ளது.

இந்த இயந்திரத்தை இரண்டு வருடங்களின் பின்னர் 5 வருடத்திற்கு பராமரிக்க 2,96,231 அமெரிக்க டொலர்களுக்கு சேவை மற்றும் பராமரிப்பு ஒப்பந்தத்துக்கான உடன்படிக்கையை இந்த நிறுவனங்களுடன் மேற்கொள்ளவும் அமைச்சரவை அனுமதியளித்த நிலையில் கடந்த அரசால் அதற்கான ஒப்பந்தம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே சில வாரங்களில் நோயாளர்கள் எந்த சிரமுமின்றி யாழ் போதனா வைத்தியசாலையில் MRI Scan செய்து கொள்ளமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உற்சவத்தில் 30 பேருக்கு மட்டுமே அனுமதி!

Tharani

தேர்தல் திகதி நாளை அறிவிப்பு!

G. Pragas

டெல்லியில் சூரியகிரகணம் பார்த்த மோடி

Bavan