செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாழ் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியம்..!

நாட்டில் கொரோனா தொற்று முற்றாக நீங்கிவிடவில்லை யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் தம்மை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்பாட்டின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

நாடு பூராகவும் இன்றையதினம் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணக் குடாநாடு வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் பொதுமக்களுக்கு நோய்த்தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாட்டினை முன்னெடுத்திருந்தனர்.

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி நடத்துனர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் தனியார் போக்குவரத்து சபை பஸ் நடத்துனர் சாரதிகளுக்கு யாழ்ப்பான பொலிஸாரினால் விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டின் போது,

This image has an empty alt attribute; its file name is 100104621_252192842683749_4242783597972422656_n.jpg

பஸ்களில் பயணம் செய்வோர் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து பயணத்தை தொடர அனுமதிக்கப்பட வேண்டும், மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பஸ் வண்டியில் பயணம் செய்வோர் அனைவரும் கைகளை கழுவி சுத்தப்படுத்திய பின்னரே பஸ் வண்டியில் ஏற அனுமதிக்கப்பட வேண்டும், எனவும் அவர் கேட்டுக் கொண்டதோடு பஸ்களில் சமூக இடைவெளியை கட்டாயமாக பேண வேண்டும் என தெரிவித்ததோடு பஸ் வண்டிகளில் கட்டாயமாக கிருமி தொற்று நீக்கி மருந்து வைத்திருக்க வேண்டும், எனவும் பஸ்களில் புதிதாக ஏறும் பயணிகளிடம் குறித்த கிருமிநாசினி தெளித்த பின்னரே பயணத்தை தொடர அனுமதிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

அத்துடன் முச்சக்கர வண்டிகளில் சாரதியை தவிர இருவர் மட்டுமே பயணிக்க முடியும் என தெரிவித்ததோடு கொரோனா தொற்று இன்னும் நாட்டிலிருந்து முற்றாக நீங்கவில்லை கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொலீசாராகிய எங்களுக்கும்உள்ளது எனவே மக்கள் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related posts

சூர்யா – ஹரி மீண்டும் கூட்டணி; வீச வருகிறது “அருவா”

Bavan

இளம் ஊடகவியலாளர் தற்கொலை!

G. Pragas

இலங்கையை பாராட்டியது அமெரிக்கா!

Tharani