செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாழ் மக்களை அவதானமாக இருக்க கோரிக்கை!

யாழ். மக்கள் மிகுந்த அவதானத்துடன் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

கொரோனா தொற்றுக்கு இலக்கான சுவிஸ் மத போதகரைச் சந்தித்தவர்களே தொடர்ந்தும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆகவே இந்த வைரஸின் தீவிரத்தன்மையை யாழ்.மக்கள் உணர்ந்து ஒத்துழைப்புக்களை நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருப்பதால் தான் யாழில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைவாக உள்ளது. ஆகவே ஊரடங்கு வேளையில் மக்கள் வீடுகளுக்குள் இருப்பதே பாதுகாப்பானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மார்ச் 3க்கு பின்னர் நாடாளுமன்றம் கலைப்பு

G. Pragas

சாரதி அனுமதிப் பத்திரத்தில் 55 வீதமானோர் தேர்ச்சி பெறவில்லை

Tharani

இன்றுமுதல் பரீட்சை பெறுபேற்று பத்திரங்கள்

reka sivalingam