செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

யாழ் மாநகர கட்டடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

2,350 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள யாழ்ப்பாண மாநகர மண்டபத்துக்கான நிரந்தரக் கட்டடத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (07) காலை அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த பிரதமர் யாழ். மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்ற நிகழ்விலேயே குறித்த அடிக்கல்லை நாட்டியுள்ளார்.

இந்நிகழ்வில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமனற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன், யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் நகர அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

எனது ஆட்சியில் ஒற்றையாட்சி பாதுகாக்கப்படும்- ஜனாதிபதி

reka sivalingam

தொடர் மழை காரணமாக அவதியுறும் மக்கள்

Tharani

இன்றைய நாள் ராசி பலன்கள் (23/1) – உங்களுக்கு எப்படி?

Bavan

Leave a Comment