in , ,

யாழ் மாநகர ‘காவல்படை’ சீருடை புலிகளுடையதை ஒத்ததாம் – பொலிஸ் விசாரணை!

யாழ்ப்பாணம் மாநகர சபை உருவாக்கியுள்ள ‘காவல்படை’ பணிக்குழு ஊழியர்களுக்கான சீருடை புலிகளின் காவல்துறை சீருடையை ஒத்ததாக உள்ளதாகத் தெரிவித்து பொலிஸாரால் நேற்று (7) விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதன்படி மாநகர ஆணையாளர், பிரதான வருமான வரிப் பரிசோதகர் மற்றும் காவல்படை ஊழியர்கள் ஐவரிடமும் நேற்றையதினம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

காவலாளி சேவையை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் காவல்படை என்ற பெயரில் அரச துறையில் ஐவரை கடைமக்கு அமர்த்தியதாக இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை உயர்மட்ட உத்தரவின்படி சீருடைகளை பொலிஸாரிடம் ஒப்படைத்து, பணிகளை இடைநிறுத்துமாறு பொலிஸார் பணித்ததாகவும் கூறப்படுகின்றது.

யாழ்.மாநகரில் சுகாதார நடைமுறைகள், கழிவகற்றல் பொறிமுறைகள் மற்றும் மாநகரின் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காக குறித்த மாநகர காவல்படை உருவாக்கப்பட்டிருந்தது.

யாழில் இன்று 129 பேருக்கு கொரோனா!

தீவிரவாத வகுப்பு நடத்தியதாக ரிஐடியால் இருவர் கைது!