in , ,

யாழ் மாநகர மத்தி 10 நாட்களுக்கு முடக்கம் – நிகழ்வுகளுக்கு தடை!

யாழ்ப்பாணத்தில் இன்று (25) கொரோனாத் தொற்றாளர்கள் அதிக அளவில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தின் நகர மத்தியை அண்மித்த முக்கிய பகுதிகள் முடகக்ப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்றுமுன்னதாக கூடிய கொரோனா தடுப்பு செயலணியே குறித்த தீர்மானத்தினை அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரின் வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ். வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும், கே.கே.எஸ் வீதி சத்திரச் சந்தியிலிருந்து முட்டாஸ் கடைச் சந்தி வரையும் முடக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மாநகரில் பாடசாலைகளில் தொற்று அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் பயிலும் வகுப்புகளும் 10 நாட்களுக்கு இடைநிறுத்தப்படுகிறது.

அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தரம் 5, க.பொ.த சாதாரண தரம், உயர் தர வகுப்புகள் தவிர்ந்த அனைத்து தனியார் கல்வி நிலையங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மண்டபங்களில் திருமண நிகழ்வுகள், ஏனைய நிகழ்வுகள், கூட்டங்கள் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்படுகின்றன. வீடுகளில் சுகாதார மருத்துவ அதிகாரியின் அனுமதியுடன் நடத்த அனுமதிக்கப்படும்.

உயிரிழந்தோரின் இறுதிக் கிரிகைகளுக்கு 25 பேர் மாத்திரம் அனுமதிக்கப்படுவர்.

யாழ்ப்பாணம் மாநகரில் மக்களின் தேவையற்ற நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.

அத்துடன், யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதி முடக்கப்பட்டு பேருந்து சேவைகள் புதிய பஸ் நிலைய பகுதிக்கு மாற்றப்படுவதுடன், வர்த்தக நிலையங்களும் மூடப்படுகின்றன.

யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் 79 பேருக்கு கொரோனா!

விசுவாசமாக இருந்த முஸ்லிம்கள் போருக்கு பின் குறிவைக்கப்பட்டமை ஈஸ்டர் தீவிரவாதத்திற்கு வித்திட்டது – கஜேந்திரகுமார்