செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட வாக்கெண்ணும் ஒத்திகை நிறைவு!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலத்தில் இடம்பெற்ற மாதிரி வாக்கெண்ணும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளது என்று மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 9 மணிக்கு ஆரம்பித்த மாதிரி வாக்கெண்ணும் நடவடிக்கை மாலை 4.30 மணி அளவில் நிறைவடைந்தது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘யாழ் மாவட்ட வாக்குச் சீட்டின் நீளம் 23 அங்குலங்கள், அதன் அடிப்படையிலே சராசரியாக இன்று நாங்கள் 6000 வாக்குச் சீட்டுக்களை கணக்கெடுத்து அதற்குரிய சுகாதார நடைமுறைகளை எவ்வாறு பின்பற்றி அதனை கணக்கெடுப்பது என்பது பற்றியும், நேரம் மற்றும் தேர்தல் பணியாளர்களின் சுகாதார நடைமுறைகள் போன்ற பல விடயங்களைம் அவதானிக்கப்பட்டது.’ – என்றார்.

Related posts

போதைப்பொருள் வர்த்தகர் கைது!

Tharani

கொரோனா பலியெடுப்பு; 295,734 ஆனது!

G. Pragas

மார்ச் 3க்கு பின்னர் நாடாளுமன்றம் கலைப்பு

G. Pragas