செய்திகள்

யுகதனவி விவகாரம் நீதிமன்றில் ரிட் மனு!

கெரவலப்பிட்டிய யுகதனவி அனல் மின்நிலையத்தில் 40 வீத பங்குகளை, அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கான அமைச்சரவை தீர்மானத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால் (ஜே.வி.பி) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் வசந்த சமரசிங்க ஆகியோர்  ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
மனுவில், பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சரவை, இலங்கை மின்சார சபை, நியூ போட்ரெஸ் எனெர்ஜி பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட 43 பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்கும் போது,  அமைச்சரவை உறுப்பினர்களுக்குக் கூட அரசு  விளக்கமளிக்கவில்லை என்று  மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட பங்குப் பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு நாடாளுமன்றின் அனுமதி பெறப்படவில்லை. முறையான விலைமனுக்கோரல் நடைமுறைக்கு ஏற்ப உரிய பங்குகளை மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266